கர்நாடகாவில் கொடூரம்; கழிவுநீர் கால்வாயில் புதிதாக பிறந்த குழந்தைகள்... போலீசார் விசாரணை
கர்நாடகாவில் புதிதாக பிறந்த 4 குழந்தைகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட 3 சிசுக்கள் கழிவுநீர் கால்வாயில் கிடந்துள்ளன.
பெலகாவி,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பெலகாவி பகுதியில் முடலாகி என்ற இடத்தில் கழிவுநீர் கால்வாயில் புதிதாக பிறந்த 4 குழந்தைகள் மற்றும் உலோக பாட்டில் ஒன்றில் அடைக்கப்பட்ட 3 சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி மாவட்ட சுகாதார மற்றும் குடும்பநல அதிகாரியான டாக்டர் மகேஷ் கோனி கூறும்போது, 5 மாதம் வளர்ந்த சிசுக்களின் பாலினம் பற்றி கண்டறிந்த பின்னர், அவற்றை கொலை செய்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி விசாரணை நடத்தப்படும். கண்டறியப்பட்ட சிசுக்கள் மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளன. அதன்பின்னர் பரிசோதனைக்காக, மாவட்ட செயல் அறிவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story