வாகா எல்லையில் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்...!


வாகா எல்லையில் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்...!
x

Image Courtesy: AFP

வாகா எல்லையில் இந்திய வீரர்கள் வீறுநடை போட்டனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாடி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது.

இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளில் படைகளும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம்.

அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமாகும். இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் தேசியக்கொடியை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகழித்தனர். இந்த நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச்சென்றனர்.

இந்தியா சுதந்திரமடைந்ததன் 75-வது ஆண்டு விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து உற்சாகமடைந்தனர்.

பாகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story