வங்காளதேசத்திற்கு சட்டவிரோதமாக சர்க்கரை கடத்த முயற்சி - ஒருவர் கைது


வங்காளதேசத்திற்கு சட்டவிரோதமாக சர்க்கரை கடத்த முயற்சி - ஒருவர் கைது
x

வங்காளதேசத்திற்கு சட்டவிரோதமாக சர்க்கரை மூட்டைகளை கடத்தச் செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷில்லாங்,

மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு சட்டவிரோதமாக சர்க்கரை மூட்டைகளை கடத்திச் செல்ல முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட போலீசாரிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் சர்க்கரை மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.

முன்னதாக கடந்த 19-ந்தேதி மேகாலயாவில் உள்ள மேற்கு ஜெயிந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சர்வதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story