அவுரங்கசீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராக குரு கோபிந்த் மலைபோல் நின்றார் - பிரதமர் மோடி
அவுரங்கசீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராக குரு கோபிந்த் சிங் மலை போல் நின்றார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
சீக்கிய மத குருக்களில் 10வது மற்றும் மிகவும் முக்கியமானவர் குரு கோபிந்த் சிங். இவரின் நினைவாக 'வீர் பல் திவாஸ்' தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
அவுரங்கசீப்பும் அவரது மக்களும் வாள் மூலம் குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை மத மாற்றம் செய்ய முயற்சித்தனர். ஆகையால் தான் அவுரங்கசீப் குரு கோபிந்த் சிங்கின் 2 குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார். அவுரங்க சீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற அவரின் திட்டத்திற்கு எதிராகவும் குரு கோபிந்த் சிங் மலை போல் நின்ற அந்த காலத்தை நினைத்து பாருங்கள்' என்றார்.
Related Tags :
Next Story