சாக்கடை கால்வாயில் விழுந்து ஆட்டோ டிரைவர் சாவு


சாக்கடை கால்வாயில் விழுந்து ஆட்டோ டிரைவர் சாவு
x

துமகூருவில் சாக்கடை கால்வாயில் விழுந்து ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

துமகூரு:

துமகூரு அருகே மாலூர் தின்னே கிராமத்தை சேர்ந்தவர் அம்ஜத் (வயது 45). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்த நிலையில் நேற்று அம்ஜத் தனது ஆட்டோவில் துமகூரு திலக் பார்க் பகுதிக்கு வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை அம்ஜத் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அம்ஜத்தின் செல்போன் சாக்கடை கால்வாயில் விழுந்தது.

இதனால் செல்போனை எடுக்க அவர் சாக்கடை கால்வாயில் குதித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் திலக் பார்க் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு வந்து அம்ஜத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.


Next Story