பெங்களூருவில் இன்று ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்


பெங்களூருவில் இன்று ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

பெங்களூரு:-

2 லட்சம் ஆட்டோக்கள்

பெங்களூருவில் செல்போன் செயலி அடிப்படையில் இயங்கும் டாக்சி சேவை வழங்கும் சில நிறுவனங்கள் பைக் டாக்சிகளை இயக்கி வருகின்றன. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி தலைநகர் பெங்களூருவில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் இன்று (திங்கட்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கு 21 ஆட்டோ டிரைவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நகரில் சுமார் 2 லட்சம் இன்று ஆட்டோக்கள் ஓடாது என்று கூறப்படுகிறது. நகரில் பொதுமக்கள் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் சவாரிக்கு ஆட்டோ கிடைக்காமல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தடை விதிக்க வேண்டும்

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், "பெங்களூருவில் ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சியை இயக்குகிறது. இதில் வெள்ளை பலகை கொண்ட வாகனங்களை பைக் டாக்சிக்கு பயன்படுத்துவது சட்ட

விரோதம். இதன் காரணமாக எங்களுக்கு வருவாய் குறைந்துள்ளது. அதனால் பைக் டாக்சிக்கு உடனே தடை விதிக்க வேண்டும்" என்றனர். ஓலா, உபர் போன்ற செயலிகளிலும் ஆட்டோ சேவை கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர்கள் இன்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story