ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் தரும்படி பெண்ணுக்கு மிரட்டல்


ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க  பணம் தரும்படி பெண்ணுக்கு மிரட்டல்
x

ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் தரும்படி பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் 32 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஒரு எண்ணில் இருந்து 2 வீடியோக்கள் வந்தன. அந்த வீடியோக்களை பெண் திறந்து பார்த்த போது அதில் பெண்ணும், அவரது நண்பரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன. இதனால் பெண் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், பெண்ணிடம், உனது நண்பருடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க பிட்காயின் மூலம் நான் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது நண்பர் மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியவர் மீது ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story