உ.பி. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்பட்ட வெறும் சாதமும், உப்பும்: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்


உ.பி. பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்பட்ட வெறும் சாதமும், உப்பும்: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
x

உத்திர பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக வெறும் சாதமும், உப்பும் வழங்கப்பட்ட சம்பவத்தில் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அயோத்தி,

உத்தரபிரதேசம், அயோத்தி மாவட்டத்தில் உள்ள பிகாபூர் தாலுகாவில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக வெறும் அரிசி சாதமும், உப்பும் வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், வீடியோ வைரலானதை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட நீதிபதி நிதிஷ் குமார் கூறுகையில், இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். மாணவர்கள் மதிய உணவின் போது சாக்குகளில் அமர வைக்கப்படுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதில்லை. தலைமையாசிரியர் சரியாக பள்ளிக்கு வரவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.


Next Story