அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு - 1,000 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம்


அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு - 1,000 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம்
x

நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அயோத்திக்கு 1,000 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் சுமார் 100 நாட்களுக்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே அதிக அளவிலான பயணிகளை கையாளும் வகையில் அயோத்தி ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story