இந்தியாவில் இந்த ஆண்டு 'வெட்டுக்கிளி தாக்குதல்' ஆபத்து- அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு


இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளி தாக்குதல் ஆபத்து- அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு
x

பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது.

சென்னை,

பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் பாபா வாங்கா. 1911 ஆம் ஆண்டு வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகா என்ற இடத்தில பிறந்த இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார்.

இவர் பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் தனது வாழ்நாளில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் 9/11 தாக்குதல்கள், செர்னோபில் வெடிப்பு, இளவரசி டயானாவின் மரணம், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, 2004 தாய்லாந்து சுனாமி மற்றும் பராக் ஒபாமாவிற்கு ஜனாதிபதி பதவி போன்ற சம்பவங்களை இவர் முன்னதாகவே கணித்து கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு உலகில் வெப்பநிலை குறைவதால் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களைத் தாக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

இதனால் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. பாபாவின் கணிப்புகள் குறித்து இணையத்தில் அதிகளவில் மக்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதே போல் இத்தாலியும் மிக மோசமான வறட்சியை சந்தித்தது.

அதே போல் 2022 ஆம் ஆண்டில் ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்து கூறியிருந்தார். இவர் கூறியது போன்றே, ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கனமழை மற்றும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story