மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு தடை - மத்திய அரசு உத்தரவு


மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
x

இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூரில் மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் மணிப்பூரை சேர்ந்த 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி(RPF),ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA) உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


Next Story