உயிரியல் பூங்கா, ஆஸ்பத்திரி பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை


உயிரியல் பூங்கா, ஆஸ்பத்திரி பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:45 PM GMT)

மைசூருவில் உயிரியல் பூங்கா, ஆஸ்பத்திரி பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு:

கா்நாடகத்தில் வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து மாநிலத்தில் பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல மைசூரு மாவட்டத்திலும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா கூறுகையில், மைசூரு மாவட்டத்தில் பறவைகள் அதிகமாக இருக்கும் இடங்கள், உயிரியல் பூங்கா சுற்றுப்பகுதி, ஏரி, குளங்கள், பொதுமக்கள் நடமாடும் பூங்காக்கள், ஆஸ்பத்திாி, கோர்ட்டு வளாகம், ஆன்மிக தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்கள் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைதவிர மற்ற இடங்களில் நேர கட்டுப்பாடுடன் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என்றார்.


Next Story