பிஎப்ஐ அமைப்பிற்கு தடை ; மத்திய அரசு சரியான முடிவை எடுத்துள்ளது - மராட்டிய முதல் மந்திரி வரவேற்பு


பிஎப்ஐ அமைப்பிற்கு தடை ; மத்திய அரசு சரியான முடிவை எடுத்துள்ளது - மராட்டிய முதல் மந்திரி வரவேற்பு
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்கு மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பிற்கு மத்திய அரசு இன்று அதிரடி தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்கு மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ;

பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை எழுப்பும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு நாட்டில் இதுபோன்ற முழக்கங்களை எழுப்ப எந்த உரிமையும் இல்லை. உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். மேலும் இது தொடர்பாக மத்திய அரசு சரியான முடிவை எடுத்துள்ளது. இது தேசபக்தர்களின் நாடு என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிப்புக்குமத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு மராட்டிய முதல் மந்திரி நன்றி தெரிவித்துள்ளார்


Next Story