கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு - 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பெரொலி மாவட்டம் பரடரி பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடையே, நிதி நெருக்கடி காரணமாக தனது மகள் படிப்பிற்கான கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தை கட்ட கூடுதல் அவகாசம் வழங்கும்படி அசோக் குமார் தனியார் பள்ளியில் கேட்டுள்ளார்.
இந்நிலையில், பணம் கட்டாததால் நேற்று நடந்த தேர்வை மாணவி எழுந்த பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தேர்வை எழுதாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று மாலை பள்ளியில் இருந்து வந்த உடன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story