புதிய கர்நாடகத்தை உருவாக்குவதில் வெற்றி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெருமிதம்
புதிய கர்நாடகத்தை உருவாக்குவதில் வெற்றி கிடைத்திருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
புதிய கர்நாடகத்தை உருவாக்குவதில் வெற்றி கிடைத்திருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பிரதமர் தொடங்கி வைத்தார்
டெல்லி கர்நாடக சங்கம் உருவாகி 75 ஆண்டுகள் ஆவதையொட்டி டெல்லியில் நேற்று பவள விழா நடைபெற்றது. விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நிர்மலானந்த சுவாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
புதிய கர்நாடகத்தை உருவாக்குவதில்...
இந்த விழாவில் கலந்து கொள்வதன் மூலமாக 7 கோடி கன்னட மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கர்நாடகத்தில் பிறந்து, வளர்ந்தது நாம் ஒவ்வொருவரும் செய்த புண்ணியம். இது நமக்கு கிடைத்த பாக்கியம். கர்நாடக மாநிலத்தை முன்னேடுத்து செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. புதிய கர்நாடகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. கன்னட மொழி வளர்ச்சிக்காக சட்டசபையில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
டெல்லி கன்னட சங்கத்தை உருவாக்கியதில் கே.சி.ரெட்டியின் பங்கு முக்கியமானதாகும். அவரது சிலை கடந்த ஜனவரியில் தான் திறக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அகில பாரத கர்நாடக சாகித்ய மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தாவணகெரே மாவட்டத்தில் உலக கன்னட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தன்னை அழைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியும் கேட்டு கொண்டு இருப்பது நமக்கு கிடைத்த பெருமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.