அர்க்காவதி நில முறைகேடு விவகாரத்தில் சித்தராமையா பொய் பேசுகிறார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

அர்க்காவதி நில முறைகேடு விவகாரத்தில் சித்தராமையா பொய் பேசுகிறார்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

அர்க்காவதி நில முறைகேடு விவகாரத்தில் சித்தராமையா பொய் பேசுகிறார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

அர்க்காவதி நில முறைகேடு விவகாரத்தில் சித்தராமையா பொய் பேசுகிறார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சித்தராமையா பொய் பேசுகிறார்

அர்க்காவதி நில முறைகேடு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பொய் பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் சித்தராமையா எப்படி பொய் சொல்கிறார் என்பது, நீதிபதி கெம்பண்ணா அளித்த அறிக்கையை நான் கூட படித்திருந்தேன். அந்த அறிக்கை தற்போது என் வசம் இருக்கிறது. அந்த அறிக்கையை முதல்-மந்திரியாக இருந்து கொண்டு நான் தயாரித்தது இல்லை.

நீதிபதி கெம்பண்ணா தலைமையில் நடந்த விசாரணை அறிக்கை அதுவாகும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது தான் நீதிபதி கெம்பண்ணா தலைமையிலான குழுவை அமைத்திருந்தார்.

அவசியம் இல்லை

அர்க்காவதி நில முறைகேட்டில் சித்தராமையா ஈடுபட்டு இருப்பது உண்மை. இந்த விவகாரத்தில் நான் பொய் பேச வேண்டியதோ அல்லது குற்றச்சாட்டு கூற வேண்டிய அவசியமோ இல்லை.

அதிகாரிகள் எடுத்து வந்த ஆவணங்களில் கையெழுத்து போட்டு இருப்பதாக சித்தராமையாவே கூறி இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்பதை அவரே தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story