பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: வார்டு மறுவரையறை அறிக்கையை அனுப்ப நகர வளர்ச்சித்துறை உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: வார்டு மறுவரையறை அறிக்கையை அனுப்ப நகர வளர்ச்சித்துறை உத்தரவு
x

பெங்களூரு மாநகராட்சி தேர்தலையொட்டி வார்டு மறுவரையறை குறித்த அறிக்கையை உடனே அனுப்ப வேண்டும் என்று தலைமை கமிஷனருக்கு நகர வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, மே.24-

பெங்களூரு மாநகராட்சி தேர்தலையொட்டி வார்டு மறுவரையறை குறித்த அறிக்கையை உடனே அனுப்ப வேண்டும் என்று தலைமை கமிஷனருக்கு நகர வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

வார்டுகள் மறுவரையறை

பெங்களூரு மாநகராட்சியில் 198 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக உயர்த்த புதிய சட்டம் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. வார்டுகளை மறுவரையறை செய்ய மாநகராட்சி தலைமை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 2 முறை காலஅவகாசத்தை நீட்டிக்க கோரியது. அதன்படி அவற்றுக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அந்த குழுவுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் அந்த குழு இதுவரை வார்டு மறுவரையறை குறித்த அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு பெங்களூரு மாநகராட்சி தொடர்பான வழக்கை விசாரித்து கடந்த வாரம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

நகர வளர்ச்சித்துறை உத்தரவு

அதில் கர்நாடக அரசு பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை பணிகளை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று கெடு விதித்து உத்தரவிட்டது. இதுகுறித்து பதிலளித்த மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், வார்டு மறுவரையறை அறிக்கை தயாராக இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் வார்டு மறுவரையறை குறித்த அறிக்கையை உடனடியாக அனுப்பும்படி மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு கர்நாடக அரசின் நகர வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story