விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்குதல் - 2 பண்ணை தொழிலாளர்கள் உயிரிழப்பு


விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்குதல் - 2 பண்ணை தொழிலாளர்கள் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே விளைநிலங்களுக்குள் கரடி புகுந்து தாக்கியதில் இரண்டு பண்ணை தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஸ்ரீகாக்குளம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே வஜ்ரப்பகொட்டூர் பகுதியில் விளைநிலத்திற்குள் கரடிகள் புகுந்துள்ளன. அப்போது, அங்கு பணியில் இருந்த பண்ணை தொழிலாளர்களை கரடிகள் தாக்கி கடித்து குதறியுள்ளன. இதில், படுகாயமடைந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் கரடி தாக்கியதால் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சென்ற மற்ற விவசாயிகள், கரடிகளை விரட்டினர். பின்னர், படுகாயமடைந்த 2 பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வஜ்ரப்பகோட்டூர் பகுதியில், விவசாயிகளை கரடிகள் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வரும் நிலையில், வனத்துறையினர் கண்டும் காணாதது போல் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து கரடிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1 More update

Next Story