மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்களை ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு


மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்களை ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு
x

கோப்புப்படம் 

மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்களை ஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா,

குஜராத் மாநிலத்தில் ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான தொங்கு திடீரென விழுந்ததில் 130 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் உள்ள 2,109 பாலங்களையும் ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில பொதுப்பணித் துறை மந்திரிபுலக் ராய், மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை சந்தித்து, ​​பாலங்களின் நிலையை ஆய்வு செய்து, நவம்பர் இறுதிக்குள் தேவையான அறிக்கைகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால்" உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story