பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில்-மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே ஆய்வு


பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில்-மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே ஆய்வு
x

சிறுத்தை புலி, மான்கள் இறந்த நிலையில் பெங்களூரு பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்காவில் வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நேரில் ஆய்வு செய்தார்.

பெங்களூரு:-

சபாரி வசதி

பெங்களூரு அருகே உள்ள பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்காவில் சிறுத்தை புலி மற்றும் மான்கள் திடீரன இறந்தன. இதையடுத்து வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நேற்று அந்த பூங்காவுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதிகாரிகளுடன் அவர் கலந்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பன்னரகட்டாவில் உள்ள ஒட்டகச்சிவிங்கி மைசூருவில் இருந்து கொண்டு வரப்பட்டது. ஒரே விலங்கு உள்ள பூங்காக்களுக்கு அதே இனத்தை சேர்ந்த இன்னொரு விலங்கு கொண்டு வந்துவிட அரசு நடவடிக்கை எடுக்கும். அதன்படி இன்னொரு ஒட்டகச்சிவிங்கியை மேற்கு வங்காளத்தில் இருந்து கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம். இங்கு சபாரி வசதியும் உள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை புலி, யானை உள்ளிட்ட அனைத்து வகையான விலங்குகளும் உள்ளன.

மெட்ரோ ரெயில் வசதி

இது பெங்களூருவுக்கு அருகிலேயே இருப்பதால், மக்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். அதனால் பிரதான சாலையில் இருந்து இன்னொரு சாலை அமைக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை அமைக்க 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு ரூ.50 கோடி தேவை. அத்துடன் பன்னரகட்டா உயிரியல் பூங்கா வரை மெட்ரோ ரெயில் வசதியை விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தப்படும். கர்நாடகத்தில் வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நில பத்திரம் வழங்கப்படும். தகுதியான அனைவருக்கும் அடுத்த 3 மாதங்களில் இந்த நில பத்திரம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.


Next Story