பெங்களூரு: முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

பெங்களூரு: முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்
x

பெங்களூருவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயர் பலகை மூடப்பட்டதால், பூங்கா புனரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயர் பலகை மூடப்பட்டதால், பூங்கா புனரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்சூரில் பூங்கா புனரமைப்பு பணியின் போது முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர் பலகை மூடப்பட்டுள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பூங்காவில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உடனடியாக பூங்கா புனரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் எடயூரப்பா பெயர் பலகையை மறைத்து கட்டப்பட்ட கட்டுமானத்தை இடித்து தள்ளினர்.

பெங்களூரு தமிழ் சங்கம், காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் கோரிக்கையை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story