ஊனமுற்ற மகளை கொன்று, தற்கொலைக்கு முயன்ற பெண்.. போலீசார் விசாரணை
பெங்களூருவில் பெண் ஒருவர், தனது ஊனமுற்ற மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனவனை இழந்த பெண் ஒருவர், தனது ஊனமுற்ற மகளை (14) கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் கூற்றுப்படி, 28 வயதான அந்த பெண், பெங்களூருக்கு அருகிலுள்ள தனது வீட்டில் தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் துக்கிலிட முயன்றுள்ளார்.
இதை அறிந்த அவரது சகோதரி மற்றும் அக்கம்பக்கத்தினர், தாயையும் மகளையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர், அங்கு பெண்ணிற்கு சிகிச்சை நடைபெற்றுவரும் நிலையில், பெண்ணின் மகள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story