பீகார்; கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; 5 பேர் நீரில் மூழ்கி பலி


பீகார்; கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; 5 பேர் நீரில் மூழ்கி பலி
x

image courtesy; ANI

கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

பாட்னா,

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டின் ஷரத்து விழாவில் பங்கேற்க சாப்ரா மாவட்டத்திலிருந்து ஒரு காரில் 5 பேர் சென்றனர். விழா முடிந்து திரும்பி வரும் வேளையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாப்ரா மாவட்டத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும் நீரிழ் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் தினேஷ் சிங், லால் பாபு ஷா, சுதிர் குமார், சுரஜ் குமார் மற்றும் ராம் சந்திரா ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story