துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெகதீப் தங்கருக்கு ஆதரவு அளிப்பதாக நிதிஷ் குமார் அறிவிப்பு


துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெகதீப் தங்கருக்கு ஆதரவு அளிப்பதாக நிதிஷ் குமார் அறிவிப்பு
x

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, முன்னாள் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் போன்ற பலர் வேட்பாளர் பரிசீலனையில் இருந்தனர். இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை முறைப்படி அறிவித்த பாஜக தேசிய தலைவர் நட்டா, "ஜெகதீப் தங்கர் ஒரு விவசாயியின் மகன். தனது திறமையால் கவர்னராக உயர்ந்தவர்" என்று பெருமைப்படுத்தினார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான ஜெகதீப் தங்கருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.


Next Story