வழுக்கை தலையை மறைத்து விக்: 2வது திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளைக்கு அடி உதை


வழுக்கை தலையை மறைத்து விக்: 2வது திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளைக்கு அடி உதை
x

பீகார் மாநிலம் பஜாரா பகுதியில் வழுக்கை தலையை மறைத்து, விக் வைத்து 2-வது திருமணம் செய்ய முயன்ற நபரை தாக்கிய பெண் வீட்டார் சரமாரி தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பாட்னா,

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள டோபி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது மணமக்கள் மேடைக்கு வந்தனர். விழாவின் போது மணமகன் பாரம்பரிய வழக்கப்படி 'செஹ்ரா' என்ற தலையை மறைக்கும் கவசம் அணிவது வழக்கம். அதன்படி தலைக்கவசம் அணிய முயன்ற போது அவர் விக் வைத்து மறைத்து திருமணம் செய்ய முயன்றது அம்பலமானது.

அதாவது மொட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார். இதை கண்ட மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர். அவர்கள் மணமகனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர்.

அப்போது மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார். ஆனாலும் மணமகள் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை தாக்கினர். மேலும் அந்த மணமகன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணமகளின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவுகிறது.


Next Story