பீகார் ரெயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்


பீகார் ரெயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 12 Oct 2023 3:45 PM IST (Updated: 13 Oct 2023 8:40 AM IST)
t-max-icont-min-icon

பீகார் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ரெயில் விபத்து எதிரொலியாக, அந்த வழியாக செல்லும் பாட்னா-பூரி எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்பர்க் எக்ஸ்பிரஸ், பரவ்னி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பீகார் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நார்த் ஈஸ்ட் அதிவிரைவு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story