பீகாா்: 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இளைஞா்கள் போராட்டம்


பீகாா்:  அக்னிபத் திட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இளைஞா்கள் போராட்டம்
x

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்த இளைஞா்கள் முசாபர்பூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாட்னா,

இந்திய ராணுவத்தில் அக்னி வீா் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்க உள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்தப் பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

4 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் தங்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 25 சதவீதம் போ் மட்டுமே வழக்கமான பணியில் சேர முடியும் என கூறி பீகாாில் இளைஞா்கள் போராட்டம் நடத்தினா். நெடுஞ்சாலையில் டயா்களை கொளுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் எங்களுக்கு வேலை தாருங்கள் இல்லையென்றால் எங்களை கொன்று விடுங்கள் என கோஷம் எழுப்பினா்.

இதுதொடா்பாக இளைஞா் ஒருவா் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக ஆட்சோ்ப்பு பணி நடைபெறவில்லை. எனவே வழக்கமான ஆட்சோ்ப்பு நடைபெறும் என 2 ஆண்டுகளாக காத்திருந்ததாகவும் ஆனால் அரசு இந்த புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.

மேலும் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்த பிறகு அக்னிவீரர்களுக்கு பிற துறை வேலைவாய்ப்புகளில் 20 முதல் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொிவித்தாா்.


Next Story