பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடாது - மத்திய மந்திரி பேட்டி


பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடாது -   மத்திய  மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 16 Sept 2023 3:51 PM IST (Updated: 16 Sept 2023 4:57 PM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடாது" என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடாது" என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. எல்லையில் தாக்குதல் நடத்துவதையோ அல்லது ஊடுருவல் சம்பவங்களையோ நிறுத்தும் வரை பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை மீண்டும் தொடங்க மாட்டோம் என தெரிவித்தார் .

தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை 2023, முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், பிசிசிஐ, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததையடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெற்றன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதற்கு முன்பு இருதரப்பு போட்டியில் கடைசியாக 2012 - 2013ல் விளையாடியது. அதன்பிறகு, இரு நாடுகளும் ஐசிசி உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.

.

1 More update

Next Story