துப்பாக்கி சூடு நடத்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது


துப்பாக்கி சூடு நடத்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட   தந்தை-மகன் கைது
x

துப்பாக்கி சூடு நடத்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்

உப்பள்ளி: தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா குதுகள்ளா கிராமத்தை சேர்ந்தவர் பிலோமினா பவுல். இவரது மகன் சுந்தர் பவுல் ரவுடி ஆவார். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர் அதே பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் பிறந்தநாள் கொண்டாடினார். இதில் அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரவுடிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது சுந்தர் பவுல் கையில் துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து கேட்டபோது பிலோமினா மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தந்தை மற்றும் மகனை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story