தெலுங்கானாவில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு


தெலுங்கானாவில் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 22 Oct 2023 2:05 PM IST (Updated: 22 Oct 2023 2:20 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவ், இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல், சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

தெலுங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பாஜகவும் கணிசமான தொகுதிகளை வெல்லும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதமே எஞ்சியிருப்பதால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலையும் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பொத் சட்டமன்ற தொகுதியில் பாஜக எம்.பி சோயம் பாபு ராவ் நிறுத்தப்பட்டுள்ளார். அரவிந்த் தர்மபுரி, கோர்டலா தொகுதியிலும், பண்டி சஞ்சய் குமார் கரிம்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.


Next Story