23 தொகுதிகளுக்கான பா.ஜனதா 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கர்நாடக பா.ஜனதாவின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
2-வது பட்டியல்
கர்நாடக தேர்தலையொட்டி நேற்று முன்தினம் 189 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா கட்சி வெளியிட்டது. இதில் முக்கிய தலைவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. மேலும் 52 புதிய முகங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜனதா கட்சி தனது 2- வது கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரங்களை அறிவித்துள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல் விவரங்களை மேலிட பொறுப்பாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1.தேரஹிப்பரகி -சோமண்ணா கவுடா பட்டீல், 2.பசவண்ணா பாகேவாடி -எஸ்.கே. பெல்லுப்பி, 3.இண்டி- கசகவுடா பிரதார்,4.குருமித்கல்-லலிதா அனபூர், 5.பீதர்-ஈஸ்வர்சிங் தாகூர்,
6.பால்கி -பிரகாஷ் கன்ட்ரே,
7.கங்காவதி -பரண்ணா முன்னவள்ளி,
8.கல்கட்டகி -நாகராஜ் சப்பி, 9.கனகல்-சிவராஜ் சஜ்ஜனர்,
10 ஹாவேரி (எஸ்.சி.)-கவிசித்தப்பா தயாமன்னவர்
11.கரப்பனஹள்ளி-கருணாகரரெட்டி, 12. தாவணகெரே வடக்கு- லோகிகெரே நாகராஜ், 13.தாவணகெரே ததெற்கு அஜய்குமார்,
14, மாயகொண்டா(எஸ்.சி.)- பசவராஜ் நாயக்,15.சன்னகிரி-சிவக்குமார்,
16, பைந்தூர் குருராஜ் கந்திஒலே,17. மூடிகெரே (எஸ்.சி)- தீபக் தொட்டய்யா, 18. குப்பி-எஸ்.டி.திலீப் குமார்,
19, சிட்டலகட்டா ராமசந்திரா கவுடா
20. கோலார் தங்கவயல் (எஸ்.சி)-அஸ்வினி சம்பங்கி
21.சரணபெலகோலா -சித்தானந்தா,22.அரிசிகெரே- ஜி.வி.பசவராஜ்
23. எச்.டி.கோட்டை (எஸ்,டி)- கிருஷ்ணாநாயக் ஆகியோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
5 எம்.எல்.ஏக்களுக்கு டிக்கெட் இல்லை
இதில் 5 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. அதாவது ஹாவேரி -நேரு ஒலேகார், மாயகொண்டா- லிங்கண்ணா, மூடிகெரே -குமாரசாமி, அரிசிகெரே-என்.ஆர்.சந்தோஷ்,
சென்னகிரி-மாடால் விருபாக்ஷப்பா, பைந்தூர்-சுகுமார் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. அதன்படி இதுவரை 13 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்டியலில் முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தனரெட்டியின் சகோதரர் கருணாகரெட்டிக்கு மற்றும் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. சம்பங்கியின் மகள் அஸ்வினிக்கு பா.ஜனதாகட்சி டிக்கெட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.