பா.ஜ.க. 44-வது நிறுவன நாள்: டெல்லி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார் ஜே.பி. நட்டா


பா.ஜ.க. 44-வது நிறுவன நாள்: டெல்லி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார் ஜே.பி. நட்டா
x

பா.ஜ.க.வின் 44-வது நிறுவன நாளை முன்னிட்டு டெல்லி அலுவலகத்தில் கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஏற்றினார்.

புதுடெல்லி,

பா.ஜ.க.வின் 44-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கட்சி கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் டெல்லியில், புதிதாக கட்டப்பட்ட பா.ஜ.க. மத்திய அலுவலக (விரிவாக்கம்) திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர், 1984-ம் ஆண்டில் 2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய கட்சியின் பயணம், பின்னர் 2019-ம் ஆண்டில் 303 தொகுதிகளாக அதன் வெற்றி அமைந்து உள்ளது. அது எண்ணம் மற்றும் கருத்துகளின் விரிவாக்கத்திற்கான ஊக்கமளிக்கும் பயணம் ஆக இருந்துள்ளது.

இது ஒரு கட்டிடத்தின் விரிவாக்கம் என்றில்லாமல், ஒவ்வொரு தொண்டரின் எண்ணங்களின் விரிவாக்கமும் கூட ஆகும். கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சியின் நிறுவன உறுப்பினர்களின் முன் தலை வணங்குகிறேன் என பேசினார்.


Next Story