மாநிலங்களவை தேர்தலுக்கு பா.ஜனதா பொறுப்பாளர்கள் நியமனம்


மாநிலங்களவை தேர்தலுக்கு பா.ஜனதா பொறுப்பாளர்கள் நியமனம்
x

Image Courtacy : PTI

மாநிலங்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பா.ஜனதா நேற்று நியமித்தது.

புதுடெல்லி,

காலியாக உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜனதா நேற்று நியமித்தது.

ராஜஸ்தானில் நடக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், அரியானாவுக்கு மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், கர்நாடகாவுக்கு மத்திய சுற்றுலா மந்திரி கிஷன் ரெட்டி, மராட்டியத்துக்கு ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல், திரிபுரா மாநிலத்தில் காலியாக உள்ள 4 சட்டசபை இடங்களுக்கு 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கு பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, அசாம் மாநில மந்திரி அசோக் சிங்கால் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story