மராட்டிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் விலகல் - தாக்கரே சிவசேனாவுக்கு வெற்றி வாய்ப்பு
மராட்டிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இருந்து பா.ஜனதா வேட்பாளர் விலகியுள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் விலகல் - தாக்கரே சிவசேனாவுக்கு வெற்றி வாய்ப்பு
சிவசேனா 2 ஆக உடைந்துள்ள நிலையில், இந்த தேர்தல் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. பா.ஜனதா சார்பில் வேட்பு மனு செய்த முர்ஜி பட்டேலுக்கு ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ஆதரவு தெரிவித்தது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக நேற்று பா.ஜனதா வேட்பாளர் தனது மனுவை திருப்ப பெற்றார். இது தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே நிருபர்களிடம் கூறுகையில், "இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். எம்.பி., எம்.எல்.ஏ. மறைவை அடுத்து நடைபெறும் இடைத்தேர்தல்களில் மறைந்த தலைவரின் குடும்பத்தினருக்கு எதிராக தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது மராட்டிய அரசியல் கலாசாரம். அந்த அடிப்படையில் எங்களது வேட்பாளர் திரும்ப பெறப்பட்டுள்ளார்" என்றார்.
அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து பா.ஜனதா விலகியதை அடுத்து உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கே எளிதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.