மேல்-சபையில் ஒரு இடத்திற்கு இடைத்தேர்தல்: பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்?


மேல்-சபையில் ஒரு இடத்திற்கு இடைத்தேர்தல்: பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்?
x

கர்நாடக மேல்-சபையில் காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு:

75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் எம்.எல்.சி.யாக இருந்தவர் சி.எம்.இப்ராகிம். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் மேல்-சபையில் ஒரு இடம் காலியாக உள்ளது. அந்த ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். சட்டசபையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிவிட்டது.


அதனால் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் வேட்பாளரை நிறுத்தாது என்றே கூறப்படுகிறது. அதனால் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பா.ஜனதா இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஒரு இடத்திற்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) மாலை வேட்பாளரை அக்கட்சி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.


Related Tags :
Next Story