கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்


கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
x

சசிகலா புஷ்பா மற்றும் பாஜக நிர்வாகி பாலகணபதி தொடர்பான வீடியோ வெளியான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் பால கணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

சசிகலா புஷ்பா மற்றும் பாஜக நிர்வாகி பாலகணபதி தொடர்பான வீடியோ வெளியான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அங்கு பாஜகவினர் அஞ்சலி செலுத்த வந்த போது சசிகலா புஷ்பாவிடம் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் பாலகணபதி அத்துமீறியதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.

இதனிடையே இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் வரும் 26-ம் தேதிக்குள் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை தேசிய மகளிர் ஆணையமானது தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

1 More update

Next Story