தனது கட்சி எம்.பிக்களுக்கு பாஜக கொறடா உத்தரவு பிறப்பிப்பு


தனது கட்சி எம்.பிக்களுக்கு பாஜக கொறடா உத்தரவு பிறப்பிப்பு
x

நாடாளுமன்ற மக்களவையில் தனது கட்சி எம்.பிக்கள் வரும் 13 ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி

வரும் 13 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று வரிகள் கொண்ட கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனல் பறந்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜக தனது கட்சி எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 More update

Next Story