அரசு அதிகாரிகளை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ. இந்தூர் கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு
இவர் கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரிகளை பேட்டால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆகாஷ் விஜய்வர்கியா. இவர் மத்திய பிரதேச பாஜக மந்திரி கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் ஆவார். இவர், கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய் வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story