ராமர் கோயில் கும்பாபிஷேகம்: கிராமங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டம்


ராமர் கோயில் கும்பாபிஷேகம்: கிராமங்களில்  நேரடி ஒளிபரப்பு செய்ய  பாஜக  திட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2024 1:46 PM GMT (Updated: 9 Jan 2024 9:32 AM GMT)

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப செய்ய பெரிய திரைகள் அமைக்க தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நாட்டு மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல கிராமங்களில் அகன்ற திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப செய்ய பெரிய திரைகள் அமைக்க தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story