பிரதமா் மோடி உடன் பாஜக ஜனாதிபதி வேட்பாளா் சந்திப்பு


பிரதமா் மோடி உடன் பாஜக ஜனாதிபதி வேட்பாளா் சந்திப்பு
x

பிரதமா் நரேந்திர மோடியை, பாஜக ஜனாதிபதி வேட்பாளா் திரவுபதி முா்மு சந்தித்தாா்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (24-ந் தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், பாஜக ஜனாதிபதி வேட்பாளா் திரவுபதி முா்மு பிரதமா் மோடியை சந்தித்து உள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில்,

"திரவுபதி முா்முவை சந்தித்தேன், அவரது ஜனாதிபதி வேட்பாளர் தோ்வானது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டது. அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்பானது". இவ்வாறு அவா் பதிவிட்டு உள்ளாா்.


Next Story