எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? - முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? - முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
x

எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி செய்ததாக முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐதரபாத்,

எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி செய்ததாக முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலங்கானாவின் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயன்றதாக கூறிய அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அது குறித்த வீடியோக்களை வெளியிட்டார்.

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் எம்எல்ஏக்களான ரேகா காந்த ராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷ்வர்தன் ரெட்டி, பைலட் ரோஹித் ரெட்டி ஆகிய 4 பேருடன் பாஜகவினர் பேரம் பேச முயன்றதாக கூறப்பட்டது. அந்த எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்குவதன் மூலம், அவர்களை கட்சி மாறச் செய்து டிஆர்எஸ் அரசை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ள நிலையில், ஆதாரங்களாக சில வீடியோக்களை முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story