நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் - மெகபூபா


நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் - மெகபூபா
x

நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் என்று மெகபூபா முப்தி கூறினார்.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான முப்தி முகமது சயீத்தின் 7-வது நினைவுநாள் நிகழ்ச்சி, ஸ்ரீநகரில் நேற்று நடந்தது.

இதில் அவரது மகளும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி கலந்து கொண்டு காரசாரமாகப் பேசினார். அவர் கூறியதாவது:-

எந்த ஒரு நாடும், தனது சொந்த மக்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட முடியாது. நாட்டின் தேசியக்கொடியை பா.ஜ.க. மாற்றி காவிக்கொடியை கொண்டு வந்து விடும். 2019-ல் நாட்டின் அரசியல் சாசனத்தை சிதைத்த பா.ஜ.க. வருங்காலத்தில், அரசியல் சாசனத்தை அழித்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story