திரிபுரா இடைத்தேர்தல்: 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி
திரிபுராவில் தன்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் பிந்து தேப்நாத்.
அகர்தலா,
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற 6 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது . இந்த நிலையில், 7 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், திரிபுராவில் 2 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
போக்சாநகர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் தபஜ்ஜால் உசேன் 34146 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மிசான் உசைன் 3909 வாக்குகளே பெற்றார். இதன் மூலம் 30237 வாக்குகள் வித்தியாசத்தில் தபஜ்ஜால் உசேன் அபார வெற்றி பெற்றார்.
தன்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேப்நாத் 30017 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கவுசிக் சந்தா 11146 வாக்குகளே பெற்று தோல்வியை தழுவினார். இதன் மூலம் 18871 வாக்குகள் வித்தியாசத்தில் பிந்து தேப்நாத் அபார வெற்றி பெற்றார்.