பா.ஜனதா தொண்டரை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள்


பா.ஜனதா தொண்டரை சுட்டுக்கொன்ற நக்சலைட்டுகள்
x

சத்தீஷ்கார் மாநிலத்தில் மோலா-மன்பூர்-அம்பாகர் சவுகி மாவட்டத்தில் பா.ஜனதா தொண்டர் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 7 முதல் 30-ந் தேதி வரை சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. சத்தீஷ்கார் மாநிலத்தில் மட்டும் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்களால் நவம்பர் 7 மற்றும் 17 -ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மோலா-மன்பூர்-அம்பாகர் சவுகி மாவட்டத்தில் பா.ஜனதா தொண்டர் பிர்ஜு தாராம் (வயது 60) என்பவர் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். நவம்பர் 7-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மோலா-மன்பூரும் அடங்கும்.

இதுகுறித்து பா.ஜனதா மாநில, தலைவர் அருண் சாவோ கூறும் போது பா.ஜனதா தொண்டரை குறி வைத்து நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் இதுவாகும். இதுபோன்ற சம்பவங்களால், பா.ஜனதா தொண்டர்கள் பயப்பட மாட்டார்கள், காங்கிரசை ஆட்சியில் இருந்து விரைவில் அகற்றுவோம் என கூறினார்.


Next Story