கேரளாவை உலுக்கிய படகு விபத்து - வெளியான புதிய தகவல்
கேரளாவில் 22 பேரை பலி கொண்ட படகு விபத்தில் துறைமுக அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மலப்புரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் பகுதியில், கடந்த மாதம் சுற்றுலா பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக இதுவரை படகு உரிமையாளர், ஊழியர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், துறைமுக காப்பாளர் பிரசாத் மற்றும் சர்வேயர் செபாஸ்டின் ஆகியோரை விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மீன்பிடி படகு என்பதை மறைத்து புதிய படகு என குறிப்பிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சர்வேயர் தனது பணியில் அலட்சியத்துடன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story