கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து.. 9 பேர் உயிரிழப்பு..! 30 பேர் கதி என்ன..?
30 பேர் வரை நீரில் மூழ்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மலப்புரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
30 பேர் வரை நீரில் மூழ்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story