உ.பி: கடத்தப்பட்டதாக தேடி வந்த சிறுமி கால்வாயில் பிணமாக மீட்பு


உ.பி: கடத்தப்பட்டதாக தேடி வந்த சிறுமி கால்வாயில் பிணமாக மீட்பு
x

கடத்தப்பட்ட சிறுமியின் உடல் மதுராவில் உள்ள ராயா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புலந்த்ஷாஹர்,

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள குலாவதியில் வசிக்கும் நபர் ஒருவர், கடந்த 8ஆம் தேதி தனது மகள் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், கடத்தப்பட்ட சிறுமியின் உடல் மதுராவில் உள்ள ராயா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முனாப், சதாம் மற்றும் பிலால் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக வட்ட அதிகாரி விகாஸ் பிரதாப் சிங் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பின்னர் விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள், சிறுமியை சனௌடா கால்வாயில் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story