'பப்ஜி' காதலனை தேடி வந்த பாகிஸ்தான் பெண்ணை திருப்பி அனுப்பாவிட்டால் பயங்கரவாத தாக்குதல் நடத்துவோம் மும்பை போலீசுக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு


பப்ஜி காதலனை தேடி வந்த பாகிஸ்தான் பெண்ணை திருப்பி அனுப்பாவிட்டால் பயங்கரவாத தாக்குதல் நடத்துவோம் மும்பை போலீசுக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு
x

பாகிஸ்தானை சேர்ந்த திருமணமான பெண் சீமா ஹைதர்(வயது30). இவர் பப்ஜி காதலனை தேடி சமீபத்தில் 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்தார்.

மும்பை,

பப்ஜி காதலனை தேடி இந்தியா வந்த பெண் சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பாவிட்டால் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவோம் என மர்ம நபர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த திருமணமான பெண் சீமா ஹைதர்(வயது30). இவர் பப்ஜி காதலனை தேடி சமீபத்தில் 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்தார்.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்ததற்காக கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், தற்போது ஜாமீனில் வெளியே வந்து உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் காதலன் சச்சின் மீனா(25) உடன் வசித்து வருகிறார். சீமா ஹைதரின் குழந்தைகளும் அவர்களுடன் உள்ளனர்.

இந்தநிலையில் மும்பை போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் போன் செய்தார். உருது மொழியில் பேசிய அவர், "பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து உள்ள சீமா ஹைதரை, மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி திருப்பி அனுப்பவில்லை எனில் மும்பையில் 2008-ம் ஆண்டு நம்பவர் 26-ந்தேதி நடந்தது போன்ற பயங்கரவாத தாக்குதலை சந்திக்க தயாராக இருக்க நேரிடும். அந்த தாக்குதலுக்கு உத்தரபிரதேச அரசு தான் காரணம்" என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

மிரட்டல் விடுத்த நபர் செயலி மூலமாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். போலீசார் அழைப்பு வந்த ஐ.பி. முகவரி மூலம் மிரட்டல் விடுத்த ஆசாமியை தேடி வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story