ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 கப்பல்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்


ரூ.19,600 கோடியில் இந்திய கடற்படைக்கு 17 கப்பல்கள் - ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம்
x

கோப்புப்படம்

இந்திய கடற்படைக்கு ரோந்து பணிகளுக்காக 11 அதி நவீன ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்கள் வாங்கப்படுகின்றன.

புதுடெல்லி,

இந்திய கடற்படைக்கு ரோந்து பணிகளுக்காக 11 அதி நவீன ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும் என ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

ரூ.19,600 கோடியில் வாங்கப்படும் இந்த கப்பல்களுக்காக இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. கோவா, கொல்கத்தாவை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனங்கள், இந்த கப்பல்களை கட்டுகின்றன.


Next Story