காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை


காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 March 2024 11:27 AM GMT (Updated: 29 March 2024 11:44 AM GMT)

தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் மண்டலம் விஞ்சம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பையா. இவரின் மகன் தனுஷ் (வயது 19). இவர் ஒரு பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேசவில்லை, எனத் தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த தனுஷ் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு புளிய மரத்துக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புளியமரத்தில் வாலிபர் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அப்பகுதியினர் கங்காதரநெல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story
  • chat